தாமதம் ஏன் தமிழா

வந்தவரெல்லாம் வாழச்சொன்னது அந்தகாலத்தமிழனடா , இன்றோ
சொந்தமண்ணின் அகதிகளாக எங்கள் ஈழத்தமிழனடா ....
பாரதமெங்கும் தமிழ்மொழி வளர்த்திட மன்றம்குவித்த மனிதர்களே ....
மொழியை மட்டும் கண்டு , தமிழ்மனிதனை ஏனோ மறந்தீர்களே ...
ஓடும்மனிதன் கீழேவிழுந்தால் ஊடகம்பார்க்கும் காலம் இது ...
வாக்குகள் தேடி கால்களில் விழுந்தும் , ஊடகம் எநோவிழிமூடியது
கோடியை தாண்டிய தமிழர்கள் வாழ்ந்திடும் வேளையிலே ...
இதில் ஈழனை காத்திட பத்துலட்சம் யெந்தமூலையிலே....

எழுதியவர் : (12-Jul-15, 10:21 am)
பார்வை : 104

மேலே