கடவுள் இல்லையாம்
சங்கொலியும்
சவ ஒலியும்
பிரித்து பார்க்கமுடியாத
பகுத்தறிவாதிகள் ...........
கண்ணை மூடிக்கொண்டு
உலகமே இருண்டதென்று கூறும்
எத்தனையோ பூனைகளின்
வரிசையில் இவர்களும் ............
தனக்கு மட்டுமே
சுதந்திரம் உள்ளதென்று கூறும்
சுயநல சுதந்திர வாதிகள் ...........
கருப்பு சட்டைகள் காவிகளிடம் மட்டும்
ஏன் போராட வேண்டும்
ஏன் வெள்ளை உடைக்காரர்கள்
வெளுத்து விடுவார்களா ..........
பொதுநலம் பேசும்
பொதுநலவாதிகள்
கொள்கையில் மட்டும் ஏன் சுயநலம் .............
கடவுள் இல்லைஎன்பதும்
இருக்கிறதென்பதும்
அவரவர் விருப்பும்-
ஒன்றே ஒன்றை கூறுகிறேன்
கடவுள் இல்லையென்று கூற
நீங்கள் கடவுள் இல்லை .............
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்