மனம் தவிக்கிறதே-முஹம்மத் ஸர்பான்

அழகான பூக்களே!!
என்னவளைக் கண்டால்
பார்த்து விடாதீர்கள்.
உம்மையும் மாயம் செய்து விடுவாள்.

அவள் கயல்விழிகளில்
பல்லாயிரம் கவிதைகள்
ஒவ்வொரு பார்வையும் வில்லாக
என் நெஞ்சை துளைக்கின்றன.

பெண் கூட்டிலிருந்து நான்
தேர்ந்தெடுத்த வெண்புறாவே!!!
என் உள்ளத்திற்கு பசி
உன் குறுநகையை இரையாக போட்டு விடு.

வேர் தாங்கும் வழியை விட
காதல் பாரமானது.அவளைக்
கண்டால் அறியாமல் சிரிக்கிறேன்
பார்க்கா விட்டால் கதறி அழுகிறேன்.

நீ இன்பம் தந்த கண்ணீர் தான்
என் இமைகளோடு கனவையும் திருடி
சென்றுவிட்டாய்.நீ என் மூச்சில் கலந்ததால்
சுவாசத்தை வெளியிட மறுக்கிறேன்.என்னால் முடியவில்லை.

இராத்திரியில் ஊரெல்லாம் தூக்கம்
நான் மட்டும் விழிப்பேன்.என் அறை
சுவரெல்லாம் ஓவியமாக தெரிகின்றாள்
தொட்டால் மறைந்து விடுகிறாள்,

உள்ளத்துக்கு அழகு காதல்
காதலுக்கு அழகு கண்ணீர்
கண்ணீருக்கு அழகு பெண்
நீ இல்லையென்றால் மாய்வேனேடி!!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Jul-15, 8:44 am)
பார்வை : 725

மேலே