அன்பு அறிமுகமாக்குகிறேன்
அன்பு அறிமுகமாகிறேன் ,
இது காலத்தின் கட்டளை ...........
வேகமான நாகரீக உலகத்தில்
வேதனை நிறையவே உண்டு
ஆம் , மனிதன் மனிதனாக
வாழவில்லை ?
அன்பு என்ற ஒன்றை மட்டும்
அத்தனை பேரும்
மறந்து ஏன் ?
கண் , காது , மூக்கு ,
என்று உறுப்புகளின் அடையாளத்தோடு
முடிந்து விடவில்லை மனித அடையாளங்கள் ...........
அதையும் தாண்டி ஒன்று இருக்கிறது
அதுதான் அன்பு .........
அன்பை அடியோடு புதைத்து
வன்முறை உலகத்திற்கு
வழி வகுத்து விட்டீர்கள் நீங்கள் ..........
அன்பை விட்டுவிட்டு
ஆயுதத்தை நேசித்ததற்கு
அனுபவம் பாடம் போதவில்லையோ .............
குருதி ஆற்றில்
குப்பைகளாய் உறுப்புகள் மிதந்த பின்பும்
மனித மனங்கள் -
ஆயுதத்தையே நேசிகின்றது
அன்பை மறந்துவிட்டு .............
நெருப்பு பிழம்புகளை
நீர் அடக்குமென்ற தத்துவத்தை உணர்துனக்கு
அன்பின் ஆழம் தெரியவில்லையோ .............
ஆண்டவனிடம் யாசகம் வேண்டி
யாகங்கள் கோடி செய்தும்
அன்புதான் அவனென்று
புரியாத நீங்கள் மாக்களே ................
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்