தூய தமிழ்த் தோசை

வட்டமாக தோசை
வார்த்தெடுத்தால்
சட்டுவத்தின் சமர்த்து
சுட்டவரின் திறமை !
கிண்டினால் தோசை
உருவற்ற துண்டுகள் !
அடுத்த தோசைக்கு
சட்டுவம் ஆயுதமாக வேண்டும்
எரி காற்று மெல் எரியில் எரிய வேண்டும் !
மனைவியை அணைத்த படியே
தோசை சுட்டால்
தோசை இதய வடிவில் வருமாம் !
பெரிய குல்லாய் சமையல்காரரின்
சிறப்பு சமையல் குறிப்பு
புது மண ஜோடிகளுக்கு !

~~~கல்பனா பாரதி~~~

கவி நண்பர் எழுத்துச் சூறாவளியின் பரிந்துரைப் படி தூய தமிழில் சுடப்பட்ட
தோசை

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Jul-15, 9:36 am)
பார்வை : 111

மேலே