கென் யு மேரேஜ் மீ

அவள்
பூக்களுக்குள் உறங்குகிறவள்
என்
பாக்களுக்குள் பரவிக்கிடப்பவள்

மதியுடைந்து
நதியில் கலந்தது
அவளுடைந்து
என்னில் கலந்தாள்

இதழ்களின் இடைவெளியில்
தீப்பற்றியது
என் காதல் கதிரவன்

இதழ் பிரித்தேன்
சொல் அவிழ்த்தேன்
can you marriage me ?
அவள் முந்திக் கொண்டாள்.

எழுதியவர் : தமிழ் ஹாஜா (15-Jul-15, 9:52 am)
பார்வை : 248

மேலே