நெல்லுச்சோறு

தூக்கில் தொங்கும்
விவசாயி
காரணப்பெயர்தானோ
'கொச்சை'க்கயிறு....
.........................
வண்டல் மண்
சுரண்டல் மண்
கரிசல் மண்
கழிவான மண்
மலிவான மண்
மானுட மூளைக்குள்ளே
களிமண்..
......................
இன்னும் நாலு
விண்கலம் செலுத்தி தேடு
எந்த க் கோளிலிருந்து
விளைமண்ணை
இறக்குமதி
செய்வதென்று??
..................
கடைசியாய்
இக்கைப்பிடி மண்ணை
முகர்ந்துக் கொள்
ஆலைக்கழிவுகளால்
வண்புணர படுமுன்...

எழுதியவர் : sindhaa (16-Jul-15, 8:29 am)
சேர்த்தது : sindha
பார்வை : 91

மேலே