காதலியே வருக

காலையில் நீ எழுந்ததில் இருந்து
காத்திருகிறது கண்ணாடி
பொட்டு வைக்க நீ வந்தால்
பொழுது கொஞ்சம் போகுமென்று.

நீ அழித்து அழித்து வைத்த பொட்டிலே
அழுக்காகிப் போகிறது.
உன் வீடு அலமாரி.

நீ நடந்து வருகிறாய்
அடுத்தவர் தலையில் இருந்து
அவசர அவசரமாய் எட்டிப் பார்க்கிறது ரோஜாக்கள்
இறப்பதற்குள் ஒருமுறை உன்
இதழ்களைப் பார்த்து விடவேண்டும் என்று.

பஸ் ஸ்டாப்பில் நீ நிற்கும் வரை
வியாபாரம் பெருகுமென
காத்திருக்கிறான் கடைக்காரன்.

கூட்டமிருந்தால் நீ ஏற மாட்டாயென
பாதி வழியிலேயே பயணிகளை
இறக்கி விட்டு வருகிறான் பஸ்காரன்.

வகுப்பறைக்குள் நீ செல்லும் வரை
வாய் பிளந்தபடி வராண்டாவில் நிற்கிறது
வாலிபர்கள் கூட்டம்.

பக்கத்தில் இருப்பவர்களின் கண்களையும்
கடன் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன்
நானும் உனைக்கான.

எழுதியவர் : parkavi (16-Jul-15, 5:51 pm)
Tanglish : kathaliye varuka
பார்வை : 248

மேலே