வருணனையை வருணிக்கும் வலியவன்

வருணனையை வருணிக்கும் வலியவன் நானில்லையடி - ஆனால்
உன்னை வருணிக்காமல் போனால்
மிக வறியவன் ஆவேனடி...

கை பிடியில் நிற்கும் இடையும் - உன்
கருவண்டு பறக்கும் விழியும்
என்னை பித்தனாக்குதே...

சுருக்கென பேசும் சொல்லும் - உன்
இரவு நிலவாய் ஜொலிக்கும் பல்லும்
என்னை கிறுக்கனாக்குதே...

பனித்துளியாய் சிதறும் சிரிப்பும் - உன்
பாசம் குறையாத கடுப்பும்
என்னை அடிமையாக்குதே...


இதுவே போதுமடி -
என் சிந்தையில் கல்லும் ஏறுதடி
என் காதலி

எழுதியவர் : viyani (16-Jul-15, 4:40 pm)
பார்வை : 193

மேலே