கதவை மூடாதே

அண்ட சராசரங்கள்..
அதைத் தாண்டியும்
விரிந்து கிடக்கும் பிரபஞ்சம்..
என்று எங்கெல்லாம் போக முடியுமோ..
கண நேரத்தில்..
அங்கெல்லாம் சென்று வந்து ..
அமைதியான பின்னரே ..
தாள் தொடு தடக்கையொடு
ஒலியெழுப்பி மருட்டும்..
உவகை நாயகன்..
உற்சவன்..
எப்போதாவது திடீரென..
அவன் பிரசன்னமாவான்
ஆடி..அடங்கிய என் மனதின்
ஆழம் சென்று அங்கே..
வட்டச்சம்மணம் போட்டு உட்காருவான்
ஆனந்தம்..ஆனந்தம்..என் பேர் அதுவே
என்றுரைத்தபடி .
நேர்க்கோட்டுக் கோணங்களில்
இப்படியும் அப்படியுமாய்
தலை அசைத்து
எப்போதும் ..
அனந்து நுரைத்துக் கொண்டிருக்கும்
ஜோதியாய் ..பிழம்பாய்
முறுவலித்தபடி
என் தலையைக் கோதிடுவான்..
ஆனந்தன்..
பரமானந்தன்!
அவன் வந்து போகும் கதவினை
சாத்தி வைத்திடாத ..
வரமொன்று போதுமே
வாழ்விலே!

எழுதியவர் : கருணா (16-Jul-15, 5:58 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 215

மேலே