விலகி ஓடட்டும்

கையைப் பிடித்து
அழைத்து சென்றவர்
திடீரென காணவில்லை
..எங்கே..என்று
இருளில் தடுமாறி நிற்கிறதோ
மனம் ..
திக்கு தெரியாத காட்டின்
இடையிலே..?

குலைநடுங்கும் பயத்துடனும்
இனி ஆவதொன்றுமில்லை
என உலர்ந்து போன நெஞ்சம்
மென்னுயிரினங்களின்
ஈனச் சப்தங்களுக்கும் மிரண்டு ..
இதயத்தை பிசைகிறதோ?

கண்டுகொண்டனையோ..
முற்றிலுமாய் அழித்தொழிக்க பட வேண்டிய..
பயம் எதுவென்பதை..உணர
உணர்தலில்..பயம் விலகி
உள்ளில் ஒரு ஒளிப் பிழம்பாய்
தெரிகின்ற காட்சி காண்..!

உனது நம்பிக்கை..
உனது வாழ்க்கை..!
மற்றதெல்லாம் ..
விலகி ஓடட்டும்!

எழுதியவர் : கருணா (16-Jul-15, 4:50 pm)
Tanglish : vilaki odattum
பார்வை : 234

மேலே