மீண்டும் மீண்டும்
காண் உலகிலிருந்து
விலகிப் போகும் ..
நினைவுகளின் போக்கில் ..
எழுகின்ற ..
மனச்சிதறல்களில் ஒன்று..
நேரடியான ஒற்றை அனுபவத்தைத் ..
தந்து கொண்டே இருக்கிறது ..
என்னுள் உறைந்து போன
அகவுணர்வுகளை
அது மீட்டெடுக்கத் துவங்குகிறது..
அப்புறம் என்னையும்
உறக்கத்தில் ஆழ்த்திவிட்டு
அப்போதைக்கு
அதுவும்
உறங்கிப்போகிறது
அதைக் குறித்த மீள்பார்வைகள்
அவசியமற்று போகிறது ..
ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரியே ..
அது வந்து போவதால்!