நாய் கடித்த கேஸ்

...........................................................................................................................................

டாக்டரம்மா..
நாய் கடித்த கேஸ்..!
நாலு பேருக்கு நடுவில்
நர்சம்மா கூவ...
உள்ளே வந்தவள் இளம்பெண்...!

நாசகாரக் குதறல்தான்..
இது நாலாவது தடவையாம்..!
நல்ல வேளை..
ஹெச்ஐவி நோயில்லை; எச்சமும் தங்கவில்லை.

நாயைத் தெரியுமா என்றார் மருத்துவி.
நாயென்று தெரியுமாம்..!
நகரத்து வீதிகளில் நளினமாய்த் திரியுமாம்..!

ஓருமுறையெனில் நாயின் பிழை..!
ஒவ்வொரு முறையுமெனில் நம் பிழையும் தானே ?
பேதையாய் இருந்தது போதும்..!
பேயாய் எழு!
விழியில் படியும் அவன் பிம்பத்தை
அவனுக்கே செலுத்து..!

மருத்துவி சொல்லிச் சென்றார்..!
மறு வாரம் பணி மாறியது..!

டாக்டரம்மா..
பேய் கடித்த கேஸ்..!
நாறிக் கிடக்கும் குளிரூட்டுப் பிணவறையில்
நாயின் சடலம்..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Jul-15, 7:09 pm)
பார்வை : 45

மேலே