விட்டு செல்லாதே தோழி
தோழியே
உன் சோகம் எனக்கும் என்றாய்
தோல் சாய தாங்கி நின்றாய்
தலையணையாய் உன் மடியை தந்தாய்
நான் உறங்க நீ விழித்தாய்
நான் விழித்த போது எங்கே சென்றாய்
நான் எதெற்கு சுமை என்று விட்டு
சென்றாயோ
நீ போக போகிறாய் என தெரிந்து விட
மாட்டேன் என்று சொல்லாமல் சென்றாயோ
சொல்லாமல் சென்ற உன்னிடம்
இருக்கிறது என் உயிரும்
உன் மனதை கேட்டு பார்
அது சொல்லும் உன் உயிர் நான் என்று
உன் நண்பன் எனும் பெயர் கொண்டு ...