வீழ்வதனில் சுகமே -கார்த்திகா

இமைகளின் அணைப்பினை
இதமாய் ரசிக்க வைத்திடும்
முன் நெற்றிக் குழல் கற்றையைக்
காதோரம் சேர்த்திட்ட
மென்முத்தமிடுதலில் தொடங்கி

இன்று எந்தன் சமையலில்
புளிப்பும் காரமும்
சரியாய் பொருந்தியதென்று
மகிழ்ந்திடும் காலையில்
இனித்திடச் செய்கிறாய் நீ

சரியாய் சுற்றத் தெரியாத
சேலையில் நடை தவறும்போது
மடிப்புகளை சரிசெய்வதாய்
பாதங்களை இதழ்களால்
ஈரமாக்கினாய் ..

போய் வரவா
கன்னத்தை உரசும்
உன் முக முடிகள்
நீ வரும்வரை பேசும்

என்னைச் சுற்றியுள்ள
உன் வாசம் பிடித்து
சுவாசம் நிறைக்கையில்
முற்றிலுமாய் ஆட்கொள்கிறாய்

செல்லத் தூக்கத்தின்
நடுவினில் தொடர்பில்லா
கனாத் துண்டுகளில்
தொடர்கிறாய் நீ

விழித்து எழுகையில்
காணாத உன் பிம்பம்
அலைபேசி ஒலிக்கையில்
சிரிப்பது ஏனடா

ரகசியமாய் உன் விழி
திருடுகையில் புகைப்படமதில்
கள்ளனாய் நீ

முகிழ்த்திட்ட நாணம்
மேலும் சிவந்திடும்
உந்தன் வருகையில்

கரங்களின் ரோஜாக்கள்
இதழ் மலர எனை
மீட்பாயடா நீ!!

எழுதியவர் : கார்த்திகா AK (17-Jul-15, 9:00 pm)
பார்வை : 210

மேலே