என் காதல் பூவே

அன்பே ஊசி மல்லியன்றோ
உன் கண்கள்.! உன் ஒவ்வொரு
பார்வையும் என் நெஞ்சை
துளையிட்டு செல்கிறதே.!

குண்டு மல்லியன்றோ
உன் கன்னங்கள்.! அதில்
கோலி விளையாட என்
கைகள் துடிக்கிறதே.!

ஜாதி மல்லியாய் பிறந்தால்
உடனே உயிர் துறப்பேன்
என்ற பெரியாரின் பிறக்கா
மகள் அன்றோ நீ.!

பூவின் புல்லி இதழ்
உன் கீழ் உதடு என்றால்.!
அல்லி இதழ் உன்
மேல் உதடு அன்றோ.!

பூவிதழ்கள் காக்கும்
கனிகள் அன்றோ
உன் இதழ்களுக்குள்
மறைந்திருக்கும் புன்னகை.!

ஆயிரம் ஆயிரம்
வாசனை மொழிகள்
பேசும் பூக்களிலே.!
தமிழ் மொழி பேசும்
பூ நீ அன்றோ.!

பசியுள்ள வண்டாய்
நான் வந்தால் தேனை
ஊட்டும் தேன் பூவே.!
உடன் காதல் பசியை
அழைத்து வந்தால்.!
பூச்சி உண்ணும் பூவாய்
விழுங்குகிறாயே.!

ஒற்றை பூவிற்கு
இரு காம்புகள் என்றால்
அது உன் கால்கள் அன்றோ.!

சில நாட்களையே
ஆயுளாய்
பெற்ற பூவினத்தில்.!
வருடங்களை
வரமாய்
பெற்ற அதிசயப்பூ
நீ அன்றோ.!

நள்ளிரவில்
அல்லியாய் பிறந்து.!
அதிகாலையில்
தாமரையாய் தவழ்ந்து.!
நண்பகலில்
சூரியகாந்தியாய்
நிமிர்நடை போடும்.!
பூக்களின்
இளவரசி அன்றோ நீ.!

ரோஜாவின் கூந்தலிலே
மல்லிகைப்பூ இந்த
அதிசயமெல்லாம்
உன் வீட்டில் தானோ.!

உன் கள்ளச்சிரிப்பு
அரளிப்பூ அன்றோ.!
கொஞ்சம் அதில்
மயங்கினால்,பின்
முழு மயக்கம் தானோ.!

பூவே உன் உமிழ்நீர்
அல்லவா
வண்டுகளுக்கு தேன்.!

கயவர்கள் கை
தீண்டினால்
அக்னிபூ அன்றோ நீ.!

என்றோ ஒருநாள் பூக்கும்
குறிஞ்சி பூ அன்றோ
உன் காதல் பார்வை.!

அதை காண
தவமிருக்கும்
கண்கள் அன்றோ
நான்....!

எழுதியவர் : பார்த்திப மணி (17-Jul-15, 10:17 pm)
Tanglish : en kaadhal poove
பார்வை : 422

மேலே