காதலி வர்ணனை

வானம்.....
வறட்சியானது.
மேகம் அவள் ......
மென்கூந்தலில் குடியேறியதால்.

பூமி......
பொசிங்கியது.
புனித நதியெலாம்.....அவள்
கருணைகடலில் சங்கமித்ததால்.

கானம்.......
கை கூப்பியது.
ஸ்வரங்கள் அவள்....
சொல்லில் சுருண்டதால்.

பூக்கள்....
பொலிவிழந்தன.
புன்னகை போட்டியில்....அவள்
வென்றுவிட்டதால்.

ஈக்கள்.....
இடம் பிடித்தன. அவள்...
இதழ்த் தேன்.....
இனிமை நன்றென.

சந்திரன்.......
சங்கடப்பட்டான். இந்த....
எதிரி முகத்தில் ......
எப்படி விழிப்பதென்று.

இந்திரன்.....
சட்டம்போட்டான்.
இந்த மங்கையே......எனது
சொந்த மங்கையென்று.

எழுதியவர் : சுந்தரதாஸ் .க (17-Jul-15, 10:41 pm)
சேர்த்தது : சுந்தரதாஸ் க
Tanglish : kathali varnanai
பார்வை : 927

மேலே