என்னவளைப் பற்றி … ~ செல்வமுத்தமிழ்

அவள்

விழிகள் ,

வெள்ளை மேகத்தில்
கருப்பு நிலவோ ???

நெற்றி ,

சமுத்திரத்தை குளிர்வித்து
சமைக்கப்பட்ட அரைவட்டமோ ???

மூக்கு ,

எனை மூர்ச்சையடையச் செய்த
முக்கோண மூங்கில்காடோ???

இதழ்கள் ,

அருகருகே அமைக்கப்பட்ட
அதிசய அணிகளோ ???

அவள் இதயம்

இறுதிவரை எனைச்சுமக்க
துடிக்கும் என் அன்னையின் கருவறையோ ???

மொத்தத்தில் அவள்

வார்த்தைகளுக்குள்
அடங்கா
வர்ணஜாலமோ ???

எழுதியவர் : chelvamuthtamil (17-Jul-15, 11:10 pm)
பார்வை : 385

மேலே