வளைகாப்பு

மணநாள் மட்டும் உடுத்திவிட்டு
மூலையில் முடங்கி கிடந்த
பட்டு சேலைக்கு கிடைத்த மறு ஜென்மம் !

கிண்ணத்தில் கரைத்த சந்தனம்
மங்கையின் கன்னத்தில் இடம்பிடிக்க ,

வண்ண வண்ண வளையல்களை வாங்கிக்கொண்ட
சொந்தங்களோ வரிசையில் இடம்பிடிக்க ,

எழுவகை சாதங்களும் எடுக்க எடுக்க
குறையாமல் எஞ்சி நிற்க ,

இரு கை நீட்டி அமர்ந்திருக்கும் கதாநாயகியின்
கைகளோ ஆனந்தத்தில் ஆர்பரிக்க !
நடக்கும் விழா வளைகாப்பு !

தாய் சேயின் நலம் காக்க நம் முன்னோர்
என்றோ கொளுத்தி எறிந்த மத்தாப்பு

எழுதியவர் : (17-Jul-15, 11:35 pm)
சேர்த்தது : prabhakarthik
Tanglish : valakabbu
பார்வை : 8924

மேலே