தாமதம்

நிலாப்பார்த்தபடி
அழுது அடம்பிடிக்காமல்
சாப்பிட்டு தூங்கியும்
விடுகின்றன
குழந்தைகள் .....
இரவில்
தாமதமாய்
தள்ளாடியபடி
வரும்
தன் அப்பாவின்
முகம்பார்க்காமலே...

எழுதியவர் : மணிமாறன் (20-Jul-15, 7:34 am)
Tanglish : thaamatham
பார்வை : 77

மேலே