தனிமை

காலம் அப்படியே நின்றுவிடுவதில்லை
காலம் செல்ல செல்ல
தனிமை ஆட்கொள்வதென்பது
அப்பட்டமான உண்மைதான்

வாழ்க்கையில் வந்தவர்கள் போனவர்கள் எண்ணி
வைக்கவில்லை
சிலர் மட்டும் ஞாபகங்களில்

நினைவுகள் மட்டுமே கடைசியில்
நிஜங்களாகி நிற்கிறது
என் வாழ்க்கையில்
அவைகள் மட்டும்
இல்லையென்றால் நான் என்றோ அனாதையாக்கப்பட்டிருப்பேன்

சில உதட்டினில் புன்னகைப்பதும்
சில கண்களில் கண்ணீர் சொரிவதும்
வாடிக்கை ஆகிப்போனது

இத்தனைக் காலம் தனக்கென்று
ஒரு துணையைத் நாடவில்லை
இருப்பினும் வெறுமையை
உணர்கிறது மனம் இன்று

இரவு முழுக்க என்னை நானே
ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சி
பலன் தூக்கமில்லா இரவுகள்தான்

எழுதியவர் : கிட்டிப்பூனை (22-Jul-15, 7:37 pm)
சேர்த்தது : கிட்டி
Tanglish : thanimai
பார்வை : 71

மேலே