மாறும் அடையாளங்கள்

பின்புறம் நைந்துபோன
என் அரைக்கால் சட்டையின்
ஒட்டுக்களுக்குச் சமமாய்
ஈயம் பூசப்பட்டிருந்தும்
பித்தளைப் பாத்திரம் என்பது
எவர்சில்வர் பாத்திரங்களின்ஆட்சிக்கு முன்னர்
என் வீட்டுக்குள் வந்த முதல் கவுரவம்…
அதனாலேயே,
ஆகாய விமானத்துக்கு ஈடாக
கண்களாலும்
கால்களாலும்
துரத்திக்கொண்டிருந்தேன்…
எனக்குப் பேரீச்சம்பழம் கொடுத்தபின்,
அவை பிச்சைக்காரர்களின்
அடையாளமாகிப் போகும்வரை…

எழுதியவர் : பட்டினத்தார் (23-Jul-15, 6:48 am)
பார்வை : 72

மேலே