மந்தைகள் இரங்கற்பா
ஒரு தெருநாய் யாரோ ஒரு
வயதாளியின் எதிர்வரும் பிரிவு
நாளைக் குறித்து இரங்கல் ஒலி எழுப்பி
எச்சரிக்கை ஊளையிடுகிறது;
கசாப்புக் கடைக்கு ஓட்டிச் செல்லப்படும்
மந்தைகள் மெதுவாக பசும்புல் நிலத்திலிருந்து
வெளியேறுகின்றன; நாளை
நடக்கப் போவதை அறியாமலே!
நான் மட்டும் அற்பப் பொருளாய்
நோக்கமின்றித் தனித்து விடப்பட்டேன்;
புத்தியுள்ளவன் வீட்டை நோக்கித்
தளர்நடை போடுகிறான்.