கவிதையே உனக்காக----------நிஷா

சில நினைவுகளை
சுமக்கிறது என் நெஞ்சம்...
இறக்கி வைக்க இடமுமில்லை
இதயமும் காலியில்லை....
இவள் ஒரு தொடர்கதை
இனிய பயணத்தில் நான்....


என்னை
அதிகமாய் சந்தோஷப்பட
வைத்ததும் கவிதை தான்..
என்னை
அதிகமாய் அழவைத்ததைம்
கவிதைதான்..
.
என் இறுதிப்பயணம்
முடியும் வரை
நான் இரசிக்க விரும்புவதும்
கவிதை தான். ...

நான் நேசிக்கும் நிமிடங்களில்
என் இதயத்துடிப்பை
அதிகரிப்பதும் கவிதைதான் ...

நான் சேமிக்கும் நேரங்களில்
என் சிந்தனையை
அலங்கரிப்பதும் கவிதை தான்....

உன்னை மறக்கும்
நேரங்களில்
நான் நானாக இல்லை...

என் எழுதுகோலை
இரசிக்க கற்றுக்கொடுத்தாய்.
என் விரல்களை நானே
இரசிக்க கற்றுக்கொடுத்தாய். .

வார்த்தைகளின் வர்ணனையில்
வண்ணமயமாய் என்றென்றும்
நீ வாழ்க....

எழுதியவர் : நிஷா (23-Jul-15, 5:23 pm)
பார்வை : 95

மேலே