புளி மாங்காய்

புளி மாங்காய்!!!
உப்பும் மிளகும்
சேர்த்தே ஒன்றாய்
பதமாய் இடித்து
கம்பால் மாங்காய்
மரத்தில் எறிந்து
பறித்து
கல்லில் தட்டித் தட்டி உடைத்து
தொட்டுத் தொட்டு - உச்சு
கொட்டி உண்கையிலே
வாயில் எச்சி ஊரி
நம்முணர்வின்றி ஒலுகிடுமே!!
அப்பப்பா என்ன சுவை
இன்றும் நா நனைகிறது
இச்சுவைக்கு ஈடு இல்லை
நம்ம சின்னப் பருவத்திலே!!

எழுதியவர் : ஜவ்ஹர் (23-Jul-15, 5:43 pm)
பார்வை : 570

மேலே