​பூமாலை

​பூமாலை .....

பூக்கள் மாலையாய் வரிசையில்
பூவிழித் திறக்கும் சிசுவைக்கண்டு
பூரிக்கும் மனங்களைப் போன்று !

பூமாலை ......

பூத்துக் குலுங்குது பூமாலைகள்
பூப்பெய்த மங்கையை மனதார
பூத்தூவி வாழ்த்திட சூட்டிட !

​பூமாலை .....

பூக்கடையில் மாலைகள் இங்கே
பூவிதழ் கொண்ட மங்கையரின்
பூமணக்கும் கூந்தலை அலங்கரிக்க !

பூமாலை .....

பூமாலைகள் வண்ண மயமாக
பூவுலகில் சுபவேளை நேரத்தில்
பூச்சரம் அணிந்திட பொழிந்திட !

​பூமாலை .....

பூக்களின் அணிவகுப்பு ​மாலையாய்
பூவையர் சேலையில் காட்சியாய்
பூத்திடும் காண்கின்ற விழிகளும் !

​பூமாலை ......

பூமழையும் பொழியும் மேலே
பூமாலையும் விழும் மேலே
பூவுடலும் பூதவுடல் ஆனாலே


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Jul-15, 9:27 am)
பார்வை : 860

மேலே