என்னவள் 4~~ அர்ஷத்

~~நம்முடைய சேட்டைகளால்
பாவம் வெயிலில் அல்லல்
படுகிறது நமது ஆடைகள்...!!!

~~பள்ளிகூடத்தில் கடைசி மணியோசை
கேட்ட குழந்தையாய் குதிக்கிறேன்
கைபேசியில் உன் மணி அடித்தால் ...!!!

~~தூக்கத்தில் உன் உளறல்
மழலை மொழி போல
புரியவில்லை என்றாலும்
ரசிக்குது என் கண்கள் ...!!!

~~நீ என் பக்கம் வரும்பொழுதெல்லாம்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே
வைரமுத்துவின் வரிகள் உருள்கிறது ...!!!

~~குளிப்பதற்கு
அடம்பிடிக்கும்
குழந்தையாகிறேன்
கொடியில் காய்ந்த உன்
ஆடை உரசியதிலிருந்து...!!!

~~அதிர்ச்சி அடைந்தால்
நெஞ்சில் கைவைப்பார்கள்
நீ நெஞ்சில் கைவைதாலே
நான் அதிர்ச்சி அடைகிறேன் ...!!!

~~ காற்று அடித்தால் நீ சலித்து கொள்கிறாய்
நான் காற்றுக்கு நன்றி சொல்கிறேன்
நீ முடி ஒதுக்கும் அழகை நான் பார்க்க
வழி செய்ததற்காக ...!!!

~~பூமி பார்த்தே நடந்த நீ
நிமிர்ந்து வெட்கப்பட்ட போது தான்
நானும் கவிஞன் ஆனேன் ...!!!

~~ நீ வெட்டிய காதல் கிணற்றில் விழுந்து விட்டேன்
என்னை காப்பாற்ற யாரும் வராதீர்கள் என்று
கத்திக்கொண்டிருக்கிறேன் ...!!!

~~ தேவதைகள் வானத்தில்
இருப்பார்கள் என்று சொல்லிக்குடுத்த
ஆசிரியரை தேடிக்கொண்டிருக்கேன்
உன்னை முன்னிறுத்தி இல்லை என்று சொல்ல ...!!!

எழுதியவர் : அர்ஷத் (24-Jul-15, 2:50 pm)
பார்வை : 192

மேலே