கனவும் வாழ்வும்

..."" கனவும் வாழ்வும் ""...

காலையின் கனிவோடு
எழுந்திருக்க மனமின்றி
கண்ணுறக்கம் களைய
குளித்து முடித்தே
குதூகலமாய் புறப்பாடு
மெல்லவே கதிரவன் ,,,

மேல்நோக்கி எழுந்துவர
பகலின் பரபரப்பில்
வேலை சுறுசுறுப்பில்
வேகமாய் கரைந்தோட
உச்சி வெயில் கீழிறங்க
அந்திசாயும் வேளையிலே,,,

அழகான புல்வெளியில்
ஆனந்தமாய் கதைபேசி
நண்பரோடொரு உலா
நத்தையாய் சுருண்டு
இளைப்பாற இதமாக
இமைகள்தான் மூட,,,

இரவின் மடியினில்
இன்பங்கள் முளைத்திட
இன்னிசைகள் மீட்டிட
வருவாள் அவளென்று
வாசலை திறந்துவைத்தே
பஞ்சணையில் படுத்திருக்க,,,

அழகிய பெண்ணவளின்
சிறு கொலுசொலியாய்
மெல்ல பக்கம் வந்தாள்
உறக்கம் கலைக்காமல்
உயிருக்குள் ஊடுருவி
கனவிலவள் கட்டித்தழுவ,,,

தலையணையோடு யுத்தம்
சத்தமில்லாமல் நடந்தேற
மீண்டுமொரு சலசலப்பு
இயந்திரமான வாழ்வினை
பறைசாற்றும் மணியாய்
என் கைபேசி சிணுங்கியது,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-Jul-15, 2:35 pm)
Tanglish : kanavum vaazhvum
பார்வை : 46

மேலே