காதல் செய்கிறேன் 3
இரவில் குளிர் காயும் நிலா..
கோடை வாசஸ்தலம் தேடும் கதிர்..
தாகத்தை தேடி அலையும் தண்ணீர் ...
கவிதை தேடும் வரிகள் ...
அவள்...
ஒரு முரண்பாடான சிந்தனையில் தான்
இந்த விழி பிதுங்க வைக்கும் காதல் முளைக்கிறது..
இதயத்தின் அறைகளில் அவள் சுவாசம் ..
மனசின் பரப்பெல்லலாம் அவள் வாசம்..
மல்லியும் முல்லையும் போட்டிபோடும்
அவள் கூந்தல் ஏற ..
மௌனிக்கிறாள் .. எனை மொழியாக்குகிறாள் ..
புன்னகைக்கிறாள் .. எனை புதைக்கிறாள்..
இரவுகள் நீண்டும் உறக்கமில்லை ..
காத்திருக்கும் கனவுகள் போகவும்மில்லை..
அவள் நினைவுகளோடு கழிகிறது காலம்..
தினம் ஒருமுறை பார்வை அவள் விழ காத்திருப்பேன் ..
காத்திருந்த நேரமெல்லாம் அவள் சூடும் ரோஜாவை நினைத்திருப்பேன்..
இப்போது என் எதிரில் ஒரு ரோஜா..
பன்னீர் துளிகளோடு ...
சிவந்து மலர்ந்த இதழ்களில்
நீர்த்துளி ... அதில் தெரிகிறது என் பைங்கிளி ...
நிமிர்தேன் .. அசந்தேன்..
ஐந்தடி அழகே.. இனி என் உயிர் உனதே ..
வார்த்தைகள் பிசுபிசுக்கிறதே .. என் வானவில் எதிரில் தெரிகிறதே ..
காதல் செய்கிறேன் .. தொடரும் ... க நிலவன்..