மினுங்கும் முகம்

நெஞ்ச சுடுகாட்டில் நேர்மை புதைத்தென்றும்
லஞ்சம் அலுவல்கள் லாவகமாய்க் – கொஞ்ச
அனுமதிக்கும் கூட்டம் அழிகின்ற நாளில்
மினுங்கலாம் மக்கள் முகம்!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Jul-15, 2:31 am)
பார்வை : 123

மேலே