அம்மா
தாலாட்ட அன்னை உன்னை நான் தாலாட்ட
ஆசை இருக்கு உனக்கு சோறுட்ட
அள்ளி அனைக்கவா நீ தூங்க ஆராரோ பாடவா நீ தூங்க,
கடவுளை உன் பிள்ளை கண்டதில்லை
உன் அன்புக்கு களங்கமும் விளைவதில்லை
அந்த கடவுளும் உறங்குதோ உன் மடியில்
இல்லை கரைந்துதான் போனதோ உனது அன்பில்,
கொடுப்பதில் கர்ணனுக்கு ஈடு இல்ல
கா்ணனை கொன்றது கண்ணனின் பாவமில்ல
காரணம் இருவரும் ஒருவரம்மா
உன்னை கண்டாலே மிருகமும் மனிதனம்மா ,
வயதேற வாடி நிக்கின்றேன் வரம் ஒன்று கேட்டு
என் ஆயுள் தந்து முன்னாலே செல்லவா
என் அன்னை வாழ என் ஆசை தீர ,
நீ இல்லாது போனால் என்னாவேன் நானோ
எரிமலை ஏறி நிக்கின்றேன் நானோ ,
என் அன்னை தாயே என்னோடு வா வா
என் பிள்ளை நீயே என் தோளில் ஆடு
என்நாளும் உன்னை நான் தாங்க வேண்டும்
உன் பாதம் கழுவ என் பாவம் தீரும்,
உன் ஜீவன் தந்து என்னை ஈன்றாயே
ஈடேன்ன நான் செய்ய இவ்வுலகம் போதாதே,
எங்கே நான் சென்றாலும் என் கண்ணில் உன் பிம்பம்
நீ இன்றி வாழ்வேனோ நிலவில்லா வான்தானோ ,
நீ வேண்டும் அம்மா வாழ்நாளில் எல்லாம்
வரம் ஒன்று வேண்டும் உன் விரல்கள் தலைகொத
விழிகள் இமைமூட மரித்தால் உன் மடியில்
விழித்தால் உன் முகத்தில் ,,,,,written by:raja