மறுமணமும் திருமணமே
ஏற்றுக்கெள்ளணும் நீ ஏற்றுக்கொள்ளணும் - உன்
எதிரில்வரும் மாற்றஙகளை ஏற்றுக் கொள்ளணும்
மாற்றங்கள் தானேஎன்றும் மாறாதது - உனக்கு
மறுபடியும் கிடைக்கும் வாழ்வும் நேரானது
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனதில்சம்மதி - நீ
மறுத்துவிட்டால் உன்னைவிட்டு விலகும் நிம்மதி
நினைத்தபடி நமக்கெதுவும் நடப்பதுஇல்லை - நீ
நடந்ததையே நினைத்திருந்தால் நிலைத்திடும் தொல்லை
பூட்டிற்கு சாவியின்றி பெருமை ஏதம்மா? - ஒரு
பூவைக்கு புருஷன்இன்றி வாழ்க்கை ஏதம்மா?
தனிமரம்தான் என்றும்பெரும் தோப்பாகுமா? - நீ
தனிகையைத் தட்டினால் பெரும்ஓசை வருமா?
காலத்தின் நேரத்தின் விளைவு களாலே - சில
கயவர்கள் செய்யும் பெரும் சூழ்ச்சிகளாலே
கணவனையே இழந்து விடும் நிலைவரலாம் - கண்
கலங்கியே தவித்திடும் சூழ்நிலை பெறலாம்
திருமணமும் சிலநேரம் பிரிவினைத்தரலாம் - அதற்கு
மறுமணமே மருந்தாகி மாற்றத்தைத் தரலாம்
சமுதாயம் என்னசொல்லும் என்றுஎண்ணிணால் - நீ
சகலத்தையும் இழந்துவாடும் நிலையை அடையலாம்
தாய்மைதானே பெண்மைகே தனிப்பெரும்சிறப்பு - உன்
தனிமைஉனக்கு தாய்மைஎனும் சிறப்பைத் தருமா?
அம்மாஎன்று குழந்தைஉன்னை அழைக்கும் போதிலே
அந்ததெய்வம் உந்தன்கண்ணில் தெரியும் குழந்தைவடிவிலே
மறுமணத்தால் இத்தனையும் கிடைத்திடும் பெண்ணே! - நீ
மறுக்காமல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்திடு கண்ணே!
ஊரும்உறவும் தூற்றும்என்று தயங்கிவிடாதே! - நீ
உயர்ந்துவிட்டால் உலகம் வணங்கும் வருத்தப்படாதே!
தனிமையான வாழ்வுஉனக்கு இழிவைத்தந்திடும் - நீ
தூய்மையாக வாழ்ந்தாலும் பழியை சேர்த்திடும்
மறுமணத்தால் உனக்குசெரும் களங்கம்நீங்கிடும் - நீ
மறுபடியும் பூத்துக்குலுங்கும் நிலையைத் தந்திடும்
பொன்பொருளை விரும்பும் இந்தஉலக வாழ்விலே - உன்
அன்பைமட்டும் விரும்பும் மனிதன் புனிதனல்லவா?
பிறப்பென்பது ஒருமுறைதான் கிடைப்பதல்லவா? - நீ
பேதம்நீக்கி வாழ்வது நல்வாழ்க்கை அல்லவா?
அன்றுநேற்று நடந்ததெதல்லாம் மறக்கப் பழகணும்
இன்றுபுதுதாகப் பிறந்தோம் என்றநினைவை வளர்க்கணும்
உலகம்உன்னை பேசும்என்ற நினைவை மாத்தணும்
உன்வாழ்வை மட்டும்கருத்தில் கொண்டுமனதை மாத்தணும்
தூற்றிப்பேசும் யாரும்உனக்கு துணைவருவதில்லை - நீ
துன்பப்படும் நேரமுனக்கு துணையிருப் பதில்லை
தந்தைவழி உறவில்என்றும் சொந்தங்களில்லை - அவரகள்
தாங்குவார்கள் எனநினைத்தால் மடமை வேறில்லை
உன்னை விரும்பும் மனிதனைநீ ஏற்றுக்கொள்ளணும்
உற்றநண்பனாக மனதில்என்றும் எண்ணிக் கொள்ளணும்
ஜாதிமதம் பார்த்துநிற்கும் குணத்தை மாத்தணும்
ஜாதிஆணும் பெண்ணும் இரண்டேஎன நினைத்துக்கொள்ளணும்
உயர்வுதாழ்வு பார்ப்பது நல்ல வாழ்க்கையாகுமா?
உள்ளத்திலே அன்பிருந்தால் பேதம் தோன்றுமா?
உயர்வுதாழ்வு பார்த்திருந்தால் உறவு நிலைக்கமா?
உண்மையன்பு கொண்டிருந்தால் குற்றம் தோன்றுமா?
மறுமணத்தை ஏற்றுக் கொள்ளும் மாப்பிள்ளைகளே!
மனதைரணமாக்கும் வார்த்தைபேசும் குணத்தை மாத்தணும்
மறுமணமும் திருமணமே என்று உணரணும் - அந்த
மாற்றத்தையே மனதில் ஏற்று சிரித்துவாழணும் .
எழுதியவர்
சொ.பாஸ்கரன்