கனவு

வந்தது நிலவு
கண்களில் கனவு
கனவை தந்தது இரவு
அந்த கனவிலும் கண்டேன் ஒரு நிலவு ,

நிலவில் இரு விழிகள் என்னை நெருங்குது மெல்ல
நான் வியர்வையில் துள்ள
என்னை அனைத்திட மெல்ல
நான் அலறிட கைகள் உதறிட
ஒருவரும் வரவில்லை உதவிட,

மூச்சு அடைத்திட முடிவு நெருங்குதோ
என் முயற்சிகள் நழுவிட நான் தோல்வியை தழுவிட
முடிந்தது யுத்தமா என்னை வென்றது மொத்தமா
நான் நனைந்துவிட்டேன் சுத்தமா,

விழித்து எழுந்தேன் விடைகள் தேடி
தலையேல்லாம் பாரம் தலையனை ஈரம்
விதியை எண்ணி வெளியில் வந்தேன்
விதவை நிலவு விடை கண்டு நடந்தேன்
மறுகணம் அதிர்ந்தேன் !!
பின்னால் யார் அது மறுபடி நிலவா ?
இல்லை இல்லை அது என் நிழல்தான் ,,,,

எழுதியவர் : ராஜா (26-Jul-15, 2:47 am)
சேர்த்தது : ராஜா
Tanglish : kavithai
பார்வை : 80

மேலே