தேடுகிறேனம்மா தேடுகிறேன்
மந்தையில் விற்றாயா உன்னை??
இல்லை
மணமகன் ஒருத்தனுக்கு விற்றாயா
உன்னை?? நானும்
இங்கே சிறு வயதில் வளர்த்த
ஆட்டினை போல் எங்கு விட்டாலும்
வீடு வருவது போல்-உனை
தேடி வருகிறேன்!!
ஆனால்,
நீ தான் இல்லை!!
பூவிழியே,என் பால்நிலவே
ஓர் மரத்தின் கிளையாய்
நானும் இருந்தேனம்மா!!! இன்று கிளை இருக்குது
மரம் மறைந்ததம்மா!!!!
விண்ணிலே என்னை நீ
நித்தம் காட்டுவாய்!!என் தேவியே
இன்று என்னையே இழந்து நின்றேன்
உன்னையாவது விண்ணில்
காட்டம்மா??!!!!
சோகத்தில் என் இதயம்
ஏக்க பாடல் பாட
தினம் நினைவுகளில் நீந்துகிறேன்
அவள் மேனி வந்து ஆட!!
கண்ணிலே துளி கண்ணீர்
விழுந்து விழுந்து கடலானது!!
அக்கடலிலே அவள் அலையை
தேடிய நாட்கள் வீணானது!!
என் கன்னத்தில் முத்தமிட்ட
காட்சி நெஞ்சிலே ஓடுதம்மா!!
ஐயோ! நானும் தடுக்கின்றேன்
மீறியே கண்ணீரில் கரையுதம்மா!!
உன் பாதத்தடங்கள் தேடியே
என் வாழ்க்கை பாதி கடந்தம்மா!!
என் ஆவி போகும் முன்னே
உனை அடைவேன்
உண்மையம்மா!!
நீயோ சொல்லாமல் போய் விட்டாய்
குளவிளக்கே,
இங்கே என் ஆவி துடிக்கிதடி ,
என் குருதி வெடிக்குதடி!!
சுடு வெயிலிலே உனை தேடியே
என் மேனி உருகுதடி!!
தினமும் காலையிலே தொடங்குவது
வெண்ணிலவு துயில் கொள்ளும்
நடுஇரவிலே முடிகிறது
என் தேடல்!!
கலைமகளே,
எனக்கும் வாழ்க்கை சலித்ததடி!
ஏனோ,நானும் வாழனுமென்றே
வாழுகிறேன் உன்னை தேடி!!