நீ புதிரா புனிதமா பொன்னி
ஆழ்ந்த மௌனத்தை
கிழித்துக்கொண்டு
அடிமனது அசையத்
தொடங்கிய நேரம்
இரவுகள் என்னை தூங்க
அழைத்தாலும் இமைகள்
செல்ல மறுக்கிறது
இருட்டில் மலரும் பூக்களுக்கு இமைகள் அடிமையானதோ என்னவோ எதுவுமற்று ஒற்றை நாற்காலியை ஓயாமல் தேடிச்சென்ற எனதுடம்பை கட்டுக்குள் கட்டியிழுக்க தெரியவில்லை
தவிப்புகள் அடங்கி தேடல்களை தொடர்கிறது என் ஆழ்ந்த சிந்தனைகள்
பொன்னி என் சிந்தனைகளை சன்னலுக்கு வெளியே சாட்சியாக்குகிறேன்
தென்றல்காற்று
கடத்திச் செல்கிறது உனது பெயரை இரவினில் தூங்காத எனதிமைகள் கேட்கிறது என்னிடமே அக்கேள்விகளை நீ புதிரா? புனிதமா?
பொறுத்திரு பதில் சொல்கிறேன் என்றேன் தொடரும் கவிதையின் மூலமாக,,,