இதுதான் உன் ஒழுக்கமாடி 555

அடியே...
நீ ஓரகண்ணால்
என்னை பார்த்தாலே...
என்னை நான் மறந்துவிடுகிறேனடி
அன்று முழுவதும்...
புருவம் உயர்த்தி ஒழுக்கம்
பற்றி நீ பேசுகிறாய்...
உன் பின்னால்
வரதே என்று...
என்னை ஒர கண்ணால்
வரவைக்கிறாய்...
பூக்கள் பறிப்பது
பவம் என்று...
முழம் பூவை
தலையில் சூடுகிறாய்...
சாமி கும்பிட சப்த்தம்
வேண்டாம் என்று...
காலில் கொலுசு
அணிகிறாய்...
காதல் தவறு
என்று பாடம் நடத்தி...
என்னை காதல்
செய்ய வைக்கிறாய்...
அழுகை அறவே
பிடிக்காது என்று...
என்னை மட்டும் ஏனடி
அழவைக்கிறாய்...
கவிதை எப்போதும்
வாசிப்பேன் என்று...
என் காதல் கடிதத்கை
ஏனடி கிழித்தெரிகிறாய்...
இதுதான் உன்
ஒழுக்கமாடி...
இது நியாயமா.....