எப்படி மறைப்பது என
எனக்கான கேள்வி
உன்னிடத்தில் வீற்றிருக்கிறது
ஒரு மாயக்காரியின் புன்னகையைப் போல்.
எங்கிருந்தோ வெளிப்படும்
பட்டாம் பூச்சியின் தாவலாய்
ஒரு ரகசியம்
செதிலுரித்துச் செல்லும்
என் நினைவுகளை.
காலாவதியான
நம் பிரியத்தின் மயிர்க்கால்கள்
சலனங்கள் தேங்கிய குளத்தில் மூழ்கி
தளர்ந்து படிகிறது உடலின் தரையில்.
ஒரு பௌர்ணமியில் தளும்பும் கடலென
தளும்பி அடங்கும் பிரிவின் துயரம்.
ஒரு நங்கூரமிட்ட கப்பலென
விறைத்து இருக்கும்
என் முகத்தை
உன்னிடம் மறைத்து
எப்படி வைத்துக் கொள்வதென
எனக்குத் தெரியவில்லை.