கண்ணீர் பூக்களை தூவிக்கொண்டு

காலத்தை வென்ற காவியத்தலைவன்.....
மதங்களை கடந்த மாமனிதன்....
மாணவர்களை நேசித்த நல்லாசிரியர்....
இளைஞர்களை ஈர்த்த
இன்னுமொரு விவேகானந்தர்....
இந்தியாவின்
இன்றியமையா அடையாளம்....
இளைஞர்தம் மனங்களில்,
நல்கனவுகளை வளர்த்த நாயகன்....
அரசியல் சேற்றில்
அழுக்குபடா ஆதவன்....
மாணாக்கர் தோட்டத்தில்
நம்பிக்கை செடியூன்றி,
களைகளற்று,
தழைத்து வளர....
நாளும்....
சிந்தனை உரந்தூவிய தூயவன்...
இந்தியாவின்
காலடியில் பிறந்து....
தலையை அலங்கரித்த கோமகன்.....
அகிலத்தையும் தன்பக்கம்
திரும்பச்செய்தது,
உன் அணுவிஞ்ஞானம்....
அரசியலை துறந்தது
உன் மெய்ஞானம்....
அக்கினி சிறகுகளாய்...
விரிந்த உன்பார்வையில்,
மிதந்தது
வல்லரசு கனவொன்றே....
ஊழலற்ற இந்தியாவில்,
கண்டிப்பாய் ஒருநாள்....
நனவாகும்,
உன் வல்லரசு கனவு....
அந்நல்லரசை
நாளும்நோக்கி...
மரணிக்கயியலா
உன் நினைவுகளோடு....
பயணிப்போம்....
என்றென்றும்....
கண்ணீர் பூக்களை
தூவிக்கொண்டு....