உனக்கெப்படி அஞ்சலி

நீ கோடானு கோடி இளைய தலை முறையின் சங்கொலி
உனக்கெப்படி நான் செலுத்துவேன் அஞ்சலி.
ஏவுகனை தந்த எழுச்சி நாயகனே
எல்லோரையும் உன் பக்கம் திருப்பி விட்டுவிட்டு
நீ மட்டுமெப்படி.. திரும்பி வராத திசையில்....
வல்லரசு கனவை வாய் விட்டு சொல்லிவிட்டு
இருந்து பார்க்காமல் இடையிலே போனதென்ன...
அரசு இயலிலும் கண்ணியம் காத்தவரே
அறிவுரையோடு அறிவியலை கலந்தவரே
இளமை இந்தியாவில் இரண்டற கலந்தவரே
உன்னை ஓய்வெடுக்க விட்டிருந்தால்
ஒருவேளை பிளைத்திருப்பீரோ...
விழித்திருக்கும் வரை உழைத்திருக்க நினைத்தவரே
நீ விதைத்த விதை எல்லோர் மனங்களிலும்
நாங்கள் உன்னையே விதைக்கிறோம் இந்த மண்ணில்
மாமணியே உன்னை விதைக்கிறோம் இம் மண்ணில்...