தந்தையின் சிந்தை

ஏனென்று தான்கேட்டு ,
இதயத்தால் புதுப்பாட்டு ,
காணென்று , நற்ப்பாதைச் சென்றார் – என்றும்
கருஞ்சட்டை யுருவினிலே நின்றார் !

சாதிமதம் காண்பாரை ,
சாக்கடையில் வீழ்வாரை ,
மேதினியில் மண்டியிட செய்தார் – அந்த
மூடர்களின் ஆணவத்தைக் கொய்தார் !

தெய்வமென்று பொய்ப்பேசி ,
திரிந்தார்கள் போய்காசி ,
வைதிங்கே , மாறுதலைக் கண்டார் – தானும்
வைக்கத்தார் எனும்மேன்மைக் கொண்டார் !

சதிகாரர் பிதற்றிட்ட ,
இதிகாச புரட்டுதனை ,
மதியாராய் தீயினிலே எரித்து – மாந்தர்
மனங்குளிர , போரிட்டார் சிரித்து !

பகுத்தறிவு வாளாக ,
பார்ப்பனியம் தூளாக ,
வகுத்தளித்தார் கொள்கையினை தந்தை – நாமும்
வாழ்வதற்கே வைத்திருந்தார் சிந்தை !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jul-15, 9:52 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 92

மேலே