தமிழகத்தின் இரட்சகன்

கண்ணிழந்து துடிப்போர்க்கு கண்ணும் ! காலும்
கையிழந்தோர்க்கு வாழ்வும் ! மேலே
விண்ணிலிருந்து விழும் மீனைப் போலே
விதையென பேர்தாங்கி வீழும் பெண்கள்
மண்ணிலிருந்து மறுவாழ்வுப் பெறவே , பூவாய்
மலர்ந்திடவே , மனந்திடவே ,சட்டமாக்கி
புன்னிருந்த நெஞ்சத்தை , ஆறச் செய்து
பூரிப்பாய் வாழ்கின்ற மேன்மை கண்டார் !

அரிசனமாய் வாழ்ந்திட்டால் சலுகையுண்டே !
அதிலிருந்து விடுபட்டு சாதி வீழ
ஒருசனமாய் , கிருத்துவராய் மாறிவிட்டால் ,
உயர்கின்ற சலுகைகளே இல்லை ! என்று
கிருத்துவர்கள் மனங்குமுற கண்டே , மிக்க
கருணைநிதி வளர்கின்ற உள்ளங்கொண்டு ,
புறம்போக்கு நிலைப்பட்டா , கிணறு வெட்ட
மானியமும் , புவிதன்னில் வாழ்ந்திடவே வீடும் , வட்டி

இல்லாத கடன்சலுகை , கல்விக்காக
இயற்றிட்ட திட்டமதால் , ஏக்கம் தீர்த்த
நல்லோரே ! நாயகனே ! கலைஞர் கோவே !
நானிலத்தில் பாவியரின் பாவம் போக்கும்
வல்லோனாம் ,விண்ணிருந்து வந்தே மண்ணை
வாழ்விக்கும் இயேசுவைப் போல் , தமிழகத்தில்
எல்லோரும் இன்புற்றிருக்கச் செய்யும்
இரட்சகனே ! பொன்மனத்தால் வாழும் ஊற்றே !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jul-15, 9:44 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 89

மேலே