நோய்
கண்நோயும் , கைநோயும் , காலின் நோயும் ,
காதுக்கு வந்திட்ட நோயும் , மேனிப்
புன்நோயும் பசியில்லா வயிற்று நோயும் ,
புகையாலே படுகின்ற ஈரல் நோயும் ,
வன்நோயும் , வற்றாத புற்றுநோயும் , எலும்புருக்கி
வாட்டுகின்ற நோயெல்லாம் நோயே அல்ல !
மண்நோயால் நடமாடும் மாந்தர் தம்மை
மாறாத நோயென்று கூறுவேனே !
அன்பளிப்பு பேராலே லஞ்சம் வாங்கும்
பணத்தடிமை பரதேசி நோயே ! நல்ல
பொன்னளிப்பு செய்கின்ற மண்ணில் , பாலை - அல்ல
பொல்லாத உரங்களெல்லாம் நோயாகும் ! பெண்ணைக் கண்டு
புசிரிப்புக் காட்டிகண் அடித்தே , கற்ப்பை
புலியாகக் குடிக்கின்ற நோயார் ! நம்மின்
பன்பரிப்பு செய்கின்ற பெண்கள் நோயார்
பெருகிவிடும ளவிற்கு குறைவே இல்லை !
கொள்ளையிட்டு பணத்தையெல்லாம் கொட்டிச் சேர்ப்போர் ,
கறுப்பினிலே பணம் வாங்கி வரியை ஏய்ப்போர் ,
நெல்லைநட்டு காத்தோரின் வயிற்ற டித்து
நெஞ்சுயரத் தான்நடப்போர் , கலப்படத்தால்
தொல்லையிட்டு வாழ்வாரும் கடத்தி வாழும்
துட்டரெலாம் நோயாகும் ! நாமோ என்றும்
கிள்ளிவிட்டு எரிந்திடவே நினைக்கு மிந்த
கேடரெலாம் நோயன்றி ஊட்டச் சத்தா ?
பெண்கொள்ள தொகைகேட்க்கும் மூடர் , நாட்டை
பிழைப்புக்காக பகைவனிடம் காட்டி வாழ்வார்
மண்கொள்ளப் போகின்ற மேணி தன்னை
மணியாலும் , அணியாலும் மூடிக்கொள்வார் ,
பொன்கொள்ள பல்லோரைக் கொல்வார் , போற்றும்
பேறின்றி பின்டமென திரிவார் , மூச்சை
விண்கொள்ள துடித்துவிடும் ! சமுதாயத்தில்
விலக்கிவிட நினைக்கின்ற நோய்கள் என்பேன் !