பகுத்தறிவை ஏற்ப்பீரே

சிந்தனைக்கு தடைவிதித்து ,
நிந்தனைகள் சொல்கின்ற ,
பித்தர்களே ! தெய்வப் பக்த்தர்களே ! – நீங்கள்
வந்தனைகள் செய்கின்ற
அந்தமிலா இறைவருமா ?
மூடர்களே அறிவுக் கேடர்களே !
சங்கரனின் சடையாடும் ,
திங்களினில் நடந்தாரே ,
மாந்தர்களே ! நம்பா ஓந்திகளே ! அவன்
எங்குள்ளான் ? காட்டென்றால் ,
எங்குமுளான் எனக்கூறும் ,
பெட்டைகளே ! வீழும் மட்டைகளே !

கூழின்றி வாழ்பவனை ,
வாழ்வின்றி தாழ்பவனை ,
பாராரே ! மனிதப் பேராரே – மண்ணில்
வீழ்கின்ற கற்சிலையை ,
வேண்டிபொருள் படைக்கின்ற ,
வீணர்களே ! புத்திக் கோணர்களே !

ஆபாசக் களஞ்சியத்தை ,
நாகூசும் புராணத்தை ,
நம்பிகளே ! பருத்தக் கும்பிகளே !
ஆவேசம் காட்டாமல் ,
ஐயாவின் பகுத்தறிவை ,
ஏற்ப்பிரே ! மேன்மை சேர்ப்பீரே !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jul-15, 9:54 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 62

மேலே