காந்தி

ஒருத்தியப் பகைவரை
பொருத்துனன் நெறிகளால்
திரித்திட வந்தவனாம் – உள்ளக்
கருத்தினைக் கொண்டவனாம் ! தான்
இருத்தலின் இன்னுயிர்
விடுத்தலே நன்றென
உரத்துடன் நின்றவனாம் – பகையை
திறத்துடன் வென்றவனாம் !

பொய்மையை போக்கியே
மெய்மையின் நெஞ்சினாய்
உய்து மகிழ்ந்தவனாம் – புகழ்
கொய்து தவழ்ந்தவனாம் – தான்
உய்யும் விழிகளில்
உய்ய உலகினை
செய்து இருந்தவனாம் – அருள்
பெய்த பெருந்தவனாம் !

நன்னெறி கற்றதன்
பொன்வழி சென்றுமே
தண்ணொளி விட்டவனாம் – நம்
கண்ணொளி யுற்றவனாம் – இம்
மண்ணுயிர் கொண்டபல்
இன்னலைப் போக்கிட
தன்னுடன் பெற்றவனாம் – ஒரு
தன்னலம் அற்றவனாம் !

சத்திய பாதையில்
நித்தமும் சென்றுனம்
சித்தம் கவர்ந்தவனாம் – ஒரு
யுத்தம் அமைத்தவனாம் – அதில்
கத்தியு மின்றியே
ரத்தமு மின்றியே
வெற்றி அடைந்தவனாம் – விடுதலை
பெற்றுக் கொடுத்தவனாம் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (28-Jul-15, 9:56 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 284

மேலே