கருவை மரம்
![](https://eluthu.com/images/loading.gif)
கருவை மரமும் காசுதேடும் மனிதனும்
அழகான ஊரு தமிழ்நாடு பாரு , கதை ஒன்னு கேளு
முடிவை நீயே கூறு,
மழை தண்ணி போதும் பசியாறும் ஊரு
நீ மனசு வச்சா போதும் வளமாகும் நாடு ,
சில நூறு வருசம் முன்னாடித் தானே
வெளிநாட்டுக்காரன் வந்தானே பாரு
வளமான நம் தேசம் கொஞ்சம் விளையாடி
வினைகாரன் வெளியேறும் போது ,
நீர்க்கொல்லி நோயாக மண்ணேல்லம் பாழாக
சுடுகாடு போலாக
விசம் தந்து கொல்லாம மனம் நொந்து விதைச்சனோ
நாடேல்லாம் கருவேல விதையாக ,
வருடங்கள் கடந்தோட விதையேல்லாம் மரமாக
ஊரேல்லாம் காடாச்சு மழை உதிராத பூவாச்சு
நிலமேல்லாம் தரிசாக நீரேல்லாம் வேர் உறிஞ்ச
விவசாயம் கனவாச்சு
பல விவசாயி மனம் நொந்து மடிஞ்சாச்சு ,
பட்டணம்தான் போனியடா பட்டிக்காட்ட மறந்துட்டியே
உண்ணும் போது உறைக்கலியோ
இது மண்ணு தந்த சோறுன்னு,
மழை தண்ணி வேணுமுனு ஒரு நாளும் நினைத்ததுண்டா
கன்னி தேடும் உன் கண்ணு ஒரு கன்னு வைக்க தோணலியே
பாடிச்சதேல்லாம் பள்ளியோட பகுத்தறிவு பணத்து மேல
ஆடம்பர வாழ்க்கை தேடி நீ அடிப்படைகள் மறந்துட்டியே ,
நாளை அடுப்பு எரியும் வீட்டினிலே
அரிசி இல்ல என்ன செய்வே
சேத்துவச்ச சொத்து பத்து எத்தனை நாள் சோறு போடும்
அது பஞ்சம் வந்தா கொள்ளை போகும்
பசியால உயிர் போகும் ,
காசு பணம் நீ விரும்பு ஆனா
விவசாயம் நம்மோட முதுகெலும்பு,,
அரசாங்கம் எதுக்கு இருக்கு அடிமாடா நீ அதுக்கு
அதை என்னனு நீ கேளு இல்லாட்டி
நாளை நம் பிள்ளை எதிர்காலம் இப்போதே நீ பாரு ,
அறிவான பழமொழிகள் பலபேரு சொன்னாங்க
தமிழன் பட்டுத்தான் திருந்துவான்னு
பாவி ஒருத்தனுமே சொல்லலியே,
நான் விதையாக விதைச்சிட்டேன் நீ
மரமாக முளைச்சுக்கோ
மழைவந்தா சாமிய மானசார வேண்டிக்கோ,,,,,®written by:raja