கூவல்

தாலி இல்லா தாரம் இவள்
கருப்பை நிரப்பியதால் தாயும் ஆனாள்!...
நீரிலும் எனை சுவாசிக்க வைத்தாள் கருவறையில் பத்திரமாக!...

காலத்தின் காரணத்தால்
கழற்றி வைத்தால் என்னை!....

உயிரும் மெய்யும் இரண்டென
கலந்து உயிர்மெய் ஆக்கியதால்
அம்மா என்றழைத்தேனடி!...

காலபைரவன் உன்னில்
காதல் கொண்டழைத்தானோ!...
இல்லை
கடமையாற்றிட அழைத்தானோ!...

சதியும் சாதியும்
வேறூன்றிய உலகில்
எனை தனிமையென
விட்டு சென்றாயடி!...

ஆருக்கு மூண்றென சேர்த்த உனக்கு
அத்துடன் அரை அடி தோனலையே!...

இனி
என் அழகு பாராட்ட ஆள் உண்டோ!...
அழுகை புரிந்த இதயம் உண்டோ!...

படுத்துறங்க மெத்தைமடி உண்டோ!...
பிடித்து கொள்ள பூவிரல்கள் உண்டோ!...
என் பாவத்தின் உச்சமாய்
பால் ஊட்ட மங்கையர்தான் உண்டோ!...

உயிரும் உணர்வும் உள்ள
பிண்டமென கிடக்கின்றேன்!...
குப்பை சிலை என்னை
தூக்கி செல்ல வருவார்களோ!...
இல்லை....
தூக்கிலிடத்தான் வருவார்களோ!...

ஆண் பிள்ளையாயின் அழுதிருக்கமாட்டேன்!...
கண்ணீரின் வலி அறிந்திருக்கமாட்டேன்!...

கண்ணீர் காணிக்கையிட்டு
கடவுளே வேண்டுகிறேன்
இறுதி நாள் சொல்வாயானால்
இன்று ஒருநாள் சிரித்து கொள்வேன்!...

எழுதியவர் : சரவணன் (29-Jul-15, 9:36 am)
சேர்த்தது : இந்திரா சரவணன்
பார்வை : 45

மேலே