மாளுமோஅக்கினிச் சிறகுஅமைதிக்கு உறவு
![](https://eluthu.com/images/loading.gif)
APJ Abthul kalaam-அவர்களுக்கு கவிதாஞ்சலி
மாளுமோ..அக்கினிச் சிறகு..அமைதிக்கு உறவு..?
அக்கினிச் சிறகு தன்னை,
=அமைதிக்கும் உறவு தன்னை,
தக்கதாம் செயலில் ஊக்கம்
=தரவரும் கனவு கண்டு
சிக்கலில் லாத வாழ்க்கை
=செகத்தினில் வளர நம்மை
ஒக்கவே வாழச் சொல்லி
=உணர்த்தியோன் மாளப் போமோ?
****(ஒக்க=ஒருமிக்க)***
ஈரிரு பதிற்குள் உள்ள
=இளைஞர்கள் தம்மைச் சென்று
பேரருள் உந்தித் தள்ளப்
=பிள்ளைகள் என,அ ணைத்துக்
காரியம் எதனைத் தம்,முன்
=கருத்துடன் நிறுத்த வேண்டும்;
வீரியம் எதுவென்று எல்லாம்
=விளக்கியோன் மறையப் போமோ?
***(வீரியம்=மன ஒருமைப்பாடு)***
மரங்களைப் பாது காத்தார்;
=மற்றெலா உயிர்க ளுக்கும்,
தரமுயர் உதவி செய்தார்;
=தன்னலம் குறைத்து வாழ்ந்தார்;
பெருமைகள் நாட்டுக் கீந்து
=பேரர சாக்க வாழ்ந்தார்!
சிரமதில் ஞானம் அன்றிச்
=செருக்கினை வளர்க்கார் மாளார்!
பரமனின் பெயரைச் சொல்லிப்
=பயங்கர வாதம் செய்வோர்
கரங்களில் மல்லி கைப்பூ
=கணைகளால் போடச் சொன்னார்!
உரமுடன் நாடு வாழ
=உரியன செய்தார்; நன்மைக்
கரமதை உயர்த்தி நின்றார்;
=கடினமாய் உழைத்தார் மாளார்!
(வேறு)
பாரை அடக்கிய புத்தமே பாரினுள்
யாரை இனிப்படிப்போம் யாம்?
பார்மேல் கிளையாய்ப் படர்ந்தவரே பூமிக்கு
வேராய் இனியிருக்க வோ?
(வேறு)
ஆடும் இளைஞரெலாம் ஆவல் மிகப்படிக்கத்
தேடும் திரவியமே தீந்தமிழின் -ஏடே!
இனியும் உனை ப்படிக்க, எண்ணியோ பூமி
உனையும் எடுக்குமோ உள்?
கலாம் என,உருது காட்டிய வார்த்தை
உலாவு மெனயிருந்தோம் உண்மை!- நிலாவோ
செவ்வாயோ நெப்டியூனோ சென்றயிடம் சொல்லிடுமே
எவ்வாறே னும்வருவோம் யாம்!
======My His Soul Rest In Peace================