எங்கே போனாய் எம்தலைவா
எங்கே போனாய் எம்தலைவா
எம்மை கனவு காணச் சொல்லிவிட்டு
எங்கே போனாய் எம்தலைவா
மதம் பிடிக்கா மனிதன் நீ
மனித நேயப் புருஷன் நீ
தமிழ் படித்த விஞ்ஞானி
தமிழுக்கு கிடைத்த ஞானி
எத்தனையோ பேர்
இப்பதவிக்கு வந்தபோதும்
நீ வந்த போதுதானே
குடியரசு தலைவரென்ற கோபுரப் பதவி
சந்தனத்தை பூசிக் கொண்டது .
எத்தனையோ பேர்
தொட்டுப்போன நாற்காலியில் நீ அமர்ந்த பிறகுதானே
பட்டுப் பீதாம்பரங்கள் பாரம்பரியத்தை உதறித் தள்ளி
பருத்திஆடையில் பேசிக் கொண்டது.
மனப்பாடுகள் தீர
மனப் பாடங்கள் தந்தவன்( ர்)
கணப் பாடுகள் மீற
கனவு காணச் சொன்னவன்( ர்) .
சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் நடிக்காமல்
எண்ணற்ற இளசுகளின்
மனத்திரையிலும் மானசீகத்திலும்
வாழ்ந்த கதாநாயகன் (ர்).
உம் வருகைக்குப் பிறகுதான்
ஊரெங்கும் கனவு வந்தது ...
உம் இருக்கைக்குப் பிறகுதான்
இஸ்ரோ தன் சிறகுகளை சிலிர்த்தது....
சாமானியனுக்கும்
சாம்ராஜ்ய பாசை சொல்லிக் கொடுத்த சாக்ரட்டீஸ்நீ(ர்)
சாதிக்க சொல்லியே
மாணவனை சரியான பாதைக்கு ஓட்டிய சாரதி நீ(ர்).
எவர் வருவர் உம்போல்
எவர்வரினும் இணையோ உம்போல்
எங்கே போனாய் எம்தலைவா
எம்மை கண்ணீர் குளத்தில் குளிக்கவிட்டு
ஆளாளுக்கு வந்து
அரசியல் சாக்கடையில்
அமுக்கித்தள்ள எத்தனித்த போதும்
முக்குளித்து நீ எழுந்தாய்
முழுதும் புடம் போட்ட தங்கமென
ஒரு சாமானியனும் உன்னைப் பார்க்-கலாம்
ஒரு படிப்பாளியும் உன்னைப் படிக்-கலாம்
புதிதாய் ஒருதலைவன் கூட பிறக்-கலாம்
புதுமை பித்தனே உம்போலினி எப்போது பார்க்-கலாம்.
அழுகின்ற கண்ணீர்
விழி அடியில் வாராது போனதென்ன
அத்தனையும் உன்பிரிவு வெப்பத்தில்
ஆவியாகிப் போனதுதான் என்சொல்ல.
எம்மான் நீர் வாழ்க
இந்து சமுத்திரமாய் நீர் வாழ்க!!!
இம்மாம் பெரிய தேசத்து
இறையாண்மை போல நீர் வாழ்க!!!.