கஜல் -- 7

பன்பாய், அன்பாய், நன்றாய் வாழ்ந்து பேரின்பத்தை அள்ளுவேன்
ஓர் நாள் காதல் சூட்டும் இன்ப மாலையை நான் சூடுவேன்

மேலும் மேலும் இனிமை மிஞ்ச என்றும் கவிதை தீட்டுவேன்
நாளும் நம்மை வாழ்த்தாமல் போனால் மண்ணைச் சாடுவேன்

உன்னை எண்ணும் நேரம் எந்தனெண்ணம் ஏனோ மின்னிடும்
மின்னல் தோன்றும் இல்லம் காண இன்றே விண்ணை நாடுவேன்

காதல் என்னும் நாதம் கொண்டு கீதம் உன்னைப் பாடுவேன்
காலம் போற்றும் வாழ்வை வேண்டி நானாய் என்னௌக் கூடுவேன்

நாமாய் நம்மில் நம்மைச் சேர்த்து விட்டால் ஞானம் தோன்றுமே
உன்னால் நான் மெய் ஞானம் கண்ட பின் தான் கண்ணை மூடுவேன்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (29-Jul-15, 4:21 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 61

மேலே