மனைவியின் நினைவில்,
மனைவியின் நினைவில்,
உச்சி தொட்டு பாதம் வரை
உன் உருவம் என்னுள் சிலையாகிறது
அதை அழகூட்டுகிறேன் நம் காதல் நினைவுகளால்
என்னுள் நீயும் உனக்குள் நானும்
இறந்துபோகும் அந்த
அழகிய வித்தையை நீ அறிந்ததுண்டா
என் தோழமையில் நீ காதலி
சில நேரங்களில் என் காதலில்
நீ தோழி
தோழியின் பக்கங்களை படித்துக்காட்டியதும்
காதலியின் உண்மைகளை
தோலுரித்தவலும் நீதான்
நீ அதி புத்திசாலி ,,,,,
நேரத்தின் எல்லா நிமிடங்கலுமே
உன்னை சார்ந்திருக்கும்
உன் வீட்டின் அஹ்றினைனகளும்
உனக்காய் சாட்சி கூறும்
மெல்லிய இரவு முழுக்க என் மார்பில்
தூக்கம் தொலைக்கும் உனக்கு
அதிகாலை அழகெல்லாம்
மெல்லிய புன்னகை செய்யும்
உன்னை கேலி செய்ய அங்கு யாருமில்லை.
உன்னிடமிருந்து நான் எடுத்துக்குடிக்கும் டீயும்
நீயாக எனக்களிக்கும் அன்பு முத்தமும்
அடுத்த இரவின்
கடைசிப்பகுதிவரை இனிக்கும்
எது உண்ட பின்னும்.
முத்தங்கள் சேர்த்து நீ எனக்கு சோரூட்டுவதும் அழகு.
என் அதிசயப்பெண் நீ.
உன் வாழ்வின்
எல்லா பக்கங்களையுமே
நீ எனக்காக ஒதுக்கி விடுவது
நான் தெரிந்து கொண்ட இன்பம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
